அள்ள அள்ள குறையாத சில்லறை... பைக் வாங்க இளைஞர் செய்த செயல் - மிரண்டு போன ஷோரூம் ஊழியர்கள்
பைக் வாங்குவதற்காக இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே அவர் கொண்டு வந்திருந்தார்.;
சேலம்,
சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள பைக் ஷோரும் ஒன்றில் பூபதி என்ற இளைஞர் பைக் வாங்குவதற்காக சென்றுள்ளார். தனக்கு பிடித்த மாடல் பைக்கை அவர் பதிவு செய்துவிட்டு அதற்கான பணத்தை கொடுத்த போது, ஷோரும் ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏனெனில் இரண்டரை லட்சம் ரூபாய் மொத்தத்தையும் ஒரு ரூபாய் நாணயங்களாகவே அவர் கொண்டு வந்திருந்தார். இதையடுத்து பூபதி, அவரது நண்பர்கள், ஷோரும் ஊழியர்கள் இணைந்து பல மணி நேரங்களாக அத்தனை நாணயங்களையும் எண்ணி முடித்தனர். இதன் பிறகு பூபதி தனது புதிய பைக்கை வாங்கிச் சென்றுள்ளார்.