கடலூரில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்பு

கடலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார்.

Update: 2022-03-26 16:21 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டம் புவனகிரி, கீரப்பாளையம், கம்மாபுரம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த திருமணமான ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி கடலூர் சமூக நலத்துறை சார்பாக புவனகிரியில் இன்று நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பங்கேற்று பயனாளிகளுக்கு தங்க நாணயங்களை வழங்கினார். இதில் சுமார் 800-க்கும் மேற்பட்ட பெண்கள் இன்று தங்க நாணயங்களை பெற்றுக்கொண்டனர். 

மேலும் செய்திகள்