மேற்கு தொடர்ச்சி மலையில் பரவிய காட்டுத்தீ... பொழுது போக்கிற்காக தீ வைத்த இளைஞர் கைது

பொழுது போக்கிற்காக மேற்கு தொடர்ச்சி மலையில் தீ வைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-26 12:22 GMT
கோப்புப்படம்
தேனி, 

தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏற்பட்ட காட்டுத்தீயால், 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் வன உயிரினங்கள் எரிந்து சாம்பலாயின.

இந்த நிலையில், பொழுதுபோக்கிற்காக வனப்பகுதியில் தீ வைத்ததாக அன்பு என்பவர் கைது செய்யப்பட்டார். 

இதையடுத்து பெரியகுளம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அன்பு ஆஜர்படுத்தப்பட நிலையில், அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்