பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பல் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசத்தை நீட்டிப்பதாக சென்டாக் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2022-03-25 18:13 GMT
புதுச்சேரியில் பல் மருத்துவ படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 29-ந் தேதி மாலை 6 மணி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரங்களை www.centacpuducherry.in  என்ற இணையளத்தில் தெரிந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0413-2655570, 2655571 ஆகிய எண்களுக்கு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவலை புதுச்சேரி சென்டாக் ஒருங்கிணைப்பாளர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்