வேலூர்: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்...!
வேலூர் அருகே பொதுமக்கள் எதிர்ப்புக்கு மத்தியிலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர்.
வேலூர்,
வேலூர் மாவட்டம் கொணவட்டம் பகுதியில் சதுப்பேரி உள்ளது. இந்த ஏரியின் கால்வாய்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் மழைக்காலங்களில் உபரி நீர் வெளியே செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
இதனால் ஏரிகால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர். இந்த நிலையில் கொணவட்டம் சதுப்பேரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக அதிகாரிகள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஏரி கால்வாய்யில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் முயன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அதற்கு உடன்படாமல் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையிலையில் பொது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும், எரி கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற தொடங்கி உள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.