16, 19 வயதில் இரண்டு மாணவிகள்...! ஆந்திரா கடத்திய ஆசிரியர் மாயாவி மணிமாறன் ...!
16, 19 வயதில் இரண்டு மாணவிகள்... ஆந்திரா எஸ்கேப் ... 2 ஆண்டுகள் டிமிக்கு கொடுத்த ஆசிரியர் `மாயாவி’ மணிமாறன் சிக்கினார்;
சென்னை
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன். அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்த இவர் ஒழுங்கீனச் புகாரின் பேரில் 2019 ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆத்தூரில் ஒரு நிறுவனத்தை வைத்து நடத்தி வந்தார். அங்கு பொதுமக்களின் பணத்தை பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்தார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கினார்.
சரவணபட்டியில் உள்ள பள்ளியில் நடன ஆசிரியராகவும் இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவரது பக்கத்து வீட்டில் இருந்த 16 வயது சிறுமிக்கு கணிதப்பாடம் டியூசன் எடுத்து வந்தார். இந்த நிலையில் சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி ஆசிரியர் மணிமாறன் அவரை கடத்தியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக சரணவம்பட்டி காவல் துறையினர் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். மணிமாறனுக்கு ஏற்கெனவே இரு முறை திருமணமாகியும் 16 வயது சிறுமியை பொள்ளாச்சி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
16 வயது சிறுமியுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதிக்கு சென்ற மணிமாறன், புதுமண தம்பதி என கூறிக் கொண்டு அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளரின் 19 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவருடன் மணிமாறனுக்கு பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பெண்ணுக்கும் ஆசை வார்த்தை கூறி தன்னுடன் அழைத்துக் கொண்டு மணிமாறன் தலைமறைவாகிவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து அந்த வீட்டு உரிமையாளர் கன்னியாகுமரி மாவட்ட போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் 16 வயது சிறுமியையும் 19 வயது இளம்பெண்ணையும் வெளிமாநிலங்களுக்கு தப்பி சென்றது தெரியவந்தது.
2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கோவை போலீசாரும், கன்னியாகுமரி போலீசாரும் மணிமாறனை தேடி வருகிறார்கள். கன்னியாகுமரியை சேர்ந்த இளம்பெண் அண்மையில் அவரது தோழியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ஆசிரியர் தன்னை பிடித்து வைத்திருப்பதை அந்த பெண்ணிடம் 19 வயது பெண் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த பெண் 19 வயது பெண்ணின் பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் அளித்ததை அடுத்து ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருப்பிடத்தை கண்டறிந்த தனிப்படை போலீசார் இன்று அதிகாலை மணிமாறனை கைது செய்து உடனிருந்த சிறுமியையும் இளம் பெண்மையும் மீட்டனர்.