சிசிடிவியை அகற்றுமாறு நான் கூறவில்லை; ஓ.பன்னீர் செல்வம்
அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை என்று ஓ. பன்னீர் செல்வம் வாக்கு மூலம் அளித்துள்ளார்.;
சென்னை,
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் கூறப்பட்டு வருகின்றன. அந்த மர்மம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் ஆஜர் ஆனார். காலை ஆஜரான ஓ பன்னீர் செல்வம் உணவு இடைவேளைக்குப் பிறகும் மீண்டும் விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது ஓ பன்னீர் செல்வம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:
*அப்போலோ மருத்துவமனையில் சிசிடிவி கேமராக்களை அகற்ற நான் எதுவும் சொல்லவில்லை
*தர்மயுத்தம் தொடங்கியதில் இருந்து துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்கும் வரை நான் அளித்த பேட்டியில் பேசியது அனைத்தும் சரியானதே
*சசிகலாவின் அழைப்பின் பெயரில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க வந்த அமெரிக்க மருத்துவர் சமின் சர்மா, ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கக் கூறிய நிலையில், அவர் எந்த சிகிச்சையும் அளிக்காமல் சென்றது தொடர்பான விவரங்கள் எதுவும் எனக்கு தெரியாது
*ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்துச் செல்வது குறித்து ராம் மோகன் ராவ், தன்னிடம் எதுவும் பேசவில்லை; அப்படி கேட்டிருந்தால் உடனடியாக கையெழுத்து போட்டிருப்பேன்
இவ்வாறு அவர் கூறினார்.
AIADMK coordinator @OfficeOfOPS attends Arumugasamy Commission at Tamil Nadu Social Welfare Borad in Chepauk, Chennai.
— DT Next (@dt_next) March 21, 2022
📸 @hema_dhoni#AIADMK#OPS#ArumugaswamyCommissionpic.twitter.com/kJdfktpnPA