தங்கும் விடுதியில் சூதாட்டம் 7 பேர் கைது
எல்லைப்பிள்ளைச்சாவடியில் தங்கும் விடுதியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.;
புதுசசேரி எல்லைப்பிள்ளைச்சாவடியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் சூதாட்டம் நடப்பதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜான் அந்தோணி சாமி தலைமையில் போலீசார் அந்த விடுதியில் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர். போலீசாரை கண்டதும் அங்கு சூதாடிக் கொண்டிருந்த கும்பல் தப்பியோடியது. இருப்பினும் போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் லாஸ்பேட்டை சலவையாளர் நகரை சேர்ந்த செந்தில் (வயது 42), சாரம் தென்றல் நகரை சேர்ந்த சீனு (46), லாஸ்பேட்டை ஓம் சக்தி நகரை சேர்ந்த சரவணன் (42), வேல்ராம்பட்டு மறைமலை நகரை சேர்ந்த அருண்குமார் (33), வில்லியனூர் மூர்த்தி நகரை சேர்ந்த மணிகண்டன் (36), குமரகுரு பள்ளத்தை சேர்ந்த மனோகர் (46) என்பது தெரியவந்தது. மேலும் தங்கும் விடுதியை வாடகைக்கு எடுத்து சூதாட்டத்துக்கு அனுமதித்த வேல்ராம்பட்டு மறைமலைநகரை சேர்ந்த நடராஜன் என்ற கதிர்வேல் (48) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.22 ஆயிரம் மற்றும் சீட்டு கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.