திருவாரூர்: ஜல்லிக்கட்டு போட்டியின் போது கிணற்றில் விழுந்த காளை உயிருடன் மீட்பு....!

ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு போட்டியின் போது கிணற்றுக்குள் விழுந்த காளையை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டுள்ளனர்.

Update: 2022-03-20 03:45 GMT
ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள ஒத்தக்கடை அரசடிப்பட்டி பகுதியில் முதலாம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த போட்டியில் 292 மாடுபிடி வீரர்களும், 608 காளைகளும் கலந்து கொண்டனர். 

இதில் பங்கேற்ற ராஜாப்பட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரது காளை வாடிவாசலில் இருந்து வெளியேறி ஓடும் போது அருகே  இருந்த கிணற்றுக்குள் விழுந்தது.

இதனை அறிந்த அதிர்ச்சி அடைந்த விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து வந்து காளையை மீட்கும் முயற்சியல் ஈடுபட்டனர். பின்னர் இது தொடர்பாக தீயணைப்பு வீரர்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்களின் உதவியுடன் மீட்பு பணியை மேற்கொண்ட தீயணைப்பு வீரர்கள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி காளையை பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மேலும் செய்திகள்