தமிழக பட்ஜெட்டில், குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை இடம் பெறாதது வருத்தம்: ராமதாஸ்
தமிழக பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார்
சென்னை:
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. திருக்குறள் உடன் அவையை தொடக்கி வைத்தார் சபாநாயகர் அப்பாவு. 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில், நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் காலை 10 மணிக்கு தாக்கல் செய்தார்.இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்ஜெட்டில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன
பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார் ;
தமிழக பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1,000 உதவித்தொகை, மற்றும் மின் கட்டணத்தை மாதம் ஒருமுறை வசூலித்தல் , உள்ளிட்ட திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறாதது வருத்தம் அளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்