சிவசுப்பிரமணியர் கோவில் தேரோட்டம்
வில்லியனூர் சிவசுப்பிரமணியர் கோவிலில் தேரோட்டம் நடந்தது.
வில்லியனூரில் வள்ளி-தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் 4 மாட வீதிகளில் வலம் வந்தது.
தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து சாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் பாண்டியன் தலைமையில் அறங்காவலர் குழுவினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.