சிறுமிக்கு பாலியல் தொந்தரவு; காவலாளிக்கு 5 ஆண்டு ஜெயில்
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த அடுக்குமாடி குடியிருப்பு காவலாளிக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை,
சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சிவா (வயது 64). இவர் கடந்த 2018-ம் ஆண்டு அன்று அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த எல்.கே.ஜி. படித்து வந்த 4 வயது குழந்தையை அறையில் வைத்து சிவா பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சிவா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
மற்றொரு சம்பவம்
அதேபோல், சென்னை செங்குன்றம் பகுதியில் வசிக்கும் 17 வயது மகளை காணவில்லை என கடந்த 12-ந் தேதி சிறுமியின் பெற்றோர் செங்குன்றம் போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காணாமல் போன சிறுமி அதே பகுதியை சேர்ந்த கூலி வேலை செய்யும் சந்தோஷ் (19) என்பவருடன் ஆந்திர மாநிலம் நகிரிக்கு சென்றது தெரியவந்தது. இந்நிலையில் இவ்வழக்கு அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. சிறுமியை மீட்ட போலீசார் திருமண ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்த சந்தோசை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.