மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து அ.ம.மு.க. ஆர்ப்பாட்டம் டி.டி.வி.தினகரன் பங்கேற்பு.;

Update: 2022-03-14 21:13 GMT
 திருச்சி,

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே நேற்று அ.ம.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கி பேசியதாவது:-

தமிழ்நாட்டு பிரச்சினையில் எப்போதும் தி.மு.க. கோட்டை விட்டு விடும். மேகதாதுவில் அணை கட்ட விடாமல் தடுக்க தமிழக அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நிலத்தடி நீர் குறைந்து வருகிறது. அதை அதிகப்படுத்த தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும். காடு வளர்ப்புத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விடாமல் மத்திய அரசு செயல்பட வேண்டும். தி.மு.க.விற்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அப்பாவியாக வாக்களித்து விட்டார்கள். இப்போது கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கடந்த 10 மாத ஆட்சியில் மக்களுக்கு விடியல் ஏற்படவில்லை. தி.மு.க. மேகதாதுவில் அணை கட்ட விடாமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்