பங்குனி உத்திரத் திருவிழா: வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

Update: 2022-03-14 10:24 GMT
நெல்லை,

பங்குனி உத்திரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திர தினமாகும். தமிழகத்தில் முருகன் கோவில்கள் மட்டுமின்றி அனைத்து குலதெய்வ கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பு பூஜைகளும் கொண்டாடப்படும்.

இந்த நிலையில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு வரும் 18ஆம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்