பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பால பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும்
ரூ.234 கோடியில் கட்டப்பட்டு வரும் பெருங்களத்தூர் ரெயில்வே மேம்பால பணிகளை அக்டோபர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவிட்டுள்ளார்.;
சென்னை,
சென்னையை அடுத்த பெருங்களத்தூரில் பஸ் நிலையம், ரெயில் நிலையம் அருகே ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க இந்த பகுதியில் ரூ.234.37 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை ஒப்புதல் அளித்தது.
அதன்படி, தற்போது இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு-சென்னை பாலப்பகுதி, சீனிவாசநகர் பாலப்பகுதி, சென்னை-செங்கல்பட்டு பாலப்பகுதி, கிழக்கு புறவழிச்சாலை பாலப்பகுதி என 4 வகையாக பிரிக்கப்பட்டு இந்த பாலப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
தாங்கு தூண்கள், ஓடுதளம், அணுகுசாலை தாங்கு சுவர்கள் என பல்வேறு பணிகள் 50 சதவீதத்துக்கும் மேல் முடிவடைந்து விட்டன.
அமைச்சர் ஆய்வு
இந்த நிலையில் இந்த பாலப்பணிகளை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்களின் நலன்கருதியும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் பாலப்பணிகளை ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு 23.10.2022-க்குள் முடிக்க வேண்டும் என்று ஒப்பந்ததாரருக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைகள் துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் கோதண்டராமன், தலைமை பொறியாளர் சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் சேகர், கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.