தென்காசி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 ஆசிரியர்கள் கைது..!

தென்காசி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் 2 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update: 2022-03-13 14:45 GMT
புளியங்குடி, 

தென்காசி மாவட்டம் புளியங்குயை சேர்ந்த மாணவி இந்து பிரியா (வயது 18). இவர் மனோ கல்லூரியில் பி.காம் 1-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையிலி மாணவி இந்து பிரியா நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
அப்போது தனது தற்கொலைக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என்று அவர் கடிதம் எழுதி வைத்து உள்ளார்.

இதனை அறிந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாணவி எழுதி வைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி ஆசிரியர்  முத்துமணி மற்றும் ஆசிரியை வளர்மதி ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் இவர்கள் இருவரையும் சிவகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், முத்துமணியை தென்காசி சிறையிலும், வளர்மதியை திருநெல்வேலி கொக்கிரகுள்ம் சிறையிலும் அடைத்தனர். 


மேலும் செய்திகள்