சேலம்: தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து: 40 பேர் படுகாயம்...!
சேலம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சேலம்,
சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பஸ்ஸில் 52 பயணிகள் பயணம் செய்தனர். பஸ் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள அக்கமாபேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம் செய்தவர்களில் 40 பேர் படுகாயம் அடைந்தனர். ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயம் அடைந்த 40 பேரும் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.