புது வீட்டில் கதவு ஜன்னலை திருடிய கொள்ளையன்...!
புது வீட்டில் இருந்த கதவு ஜன்னலை திருடிய கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.;
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி கட்டணஞ்செவல் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 33). இவர் இப்பகுதியில் புதிதாக ஒரு வீடு கட்டி வருகிறார். புது வீட்டிற்கு தேவையான மர ஜன்னல்கள், நிலைகதவுகள் வாங்கி புது வீட்டில் வைத்திருந்தார்.
இந்த நிலையில் இன்று வேலைக்காக வேல்முருகன் தனது புது வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது வாங்கி வைத்திருந்த நிலை கதவு, ஆறு ஜன்னல் கதவுகள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளார்.
பின்னர், இது தொடர்பாக வெம்பக்கோட்டை போலீசாரிடம் வேல்முருகன் புகார் கொடுத்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புது வீட்டில் இருந்த கதவு, ஜன்னல்கள் திருடு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.