தனியார் பெயிண்ட் கம்பெனியில் பயங்கர தீ விபத்து...!

தனியார் பெயிண்ட் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.;

Update: 2022-03-12 15:30 GMT
செங்குன்றம்,

சென்னை புழல் அருகே சூரபட்டுசாலையில் பெயிண்ட் கம்பெனி ஒன்று இயங்கி வருகின்றது.  இந்த கம்பெனியில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று மாலை திடீரென கம்பெனியில் தீப்பிடித்தது. அப்போது காற்று வேகமாக வீசியதால் தீ மளமளவென கம்பெனி முழுவதும் பரவி எரிய தொடங்கியது.

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் போரில், சம்பவ இடத்துக்கு  5 தீயணைப்பு வாகனங்களில் 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர்,பெயிண் கம்பெனியில் பற்றி ஏற்றிந்த தீயை 3 மணி நேரமாக போராடி அணைத்தனர்.

தற்போது இந்த தீ விபத்து குறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரம்பூரை சேர்ந்த பெயிண்ட் கம்பெனி உரிமையாளர் சங்கரிடம் விசாரணை நடத்தினர். 

மேலும் இந்த தீ விபத்தால் சுமார் 1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்து இருக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளனர். 

மேலும் செய்திகள்