அரசு பேருந்தில் அழைத்து சென்ற ஆயுள் தண்டனை கைதி தப்பியோட்டம்...!
அரசு பேருந்தில் அழைத்து சென்ற ஆயுள் தண்டனை கைது தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
கள்ளக்குறிச்சி,
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த ராமசாமி என்பவர் மகன் முருகவேல் (எ) பைனான்ஸ் ராஜா (வயது43).
ஆயுள் தண்டனை கைதியான முருகவேல் கடலூர் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். இவரை மற்றொரு வழக்கில் அரவக்குறிச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 11-ம் தேதி போலீசார் கடலூர் மத்திய சிறையில் இருந்து அழைத்து சென்று உள்ளனர்.
பின்னர் மீண்டும் கடலூர் சிறைக்கு முருகவேலை பேருந்து மூலம் ஆயுதப்படை போலீசார் அழைத்து வந்துள்ளனர். அவர்கள் வந்த பேருந்து கள்ளக்குறிச்சி அருகே புறவழிச் சாலையில் வந்துள்ளது. அப்போது சாலையில் இருந்த வேகத்தடை காரணமாக டிரைவர் பேருந்து மெதுவாக இயக்கி உள்ளார். இதனை பயன்படுத்தி கொண்ட முருகவேல் பேருந்தில் இருந்து வெளியே குதித்து தப்பியோடி உள்ளார்.
இதனை அறிந்த போலீசார் பேருந்தில் இருந்து விரைவாக இறங்கி தப்பிய முருகவேலை பிடிக்க முயன்றனர். ஆனால் ஆவர் மாயமாகி விட்டார்.
பின்னர், இதுபற்றி ஆயுதப்படை போலீசார் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதியை தீவிரமாக தேடி வருகின்றனர்.