மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை...!
செல்போனில் வேறொரு பெண்ணிடம் பேசியதை மனைவி கண்டித்ததால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.;
நம்பியூர்,
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கே .மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 26). இவர் அதே பகுதியில் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்
இவர் கடந்த 6 வருடத்திற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த பிருந்தா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். இருவர்களுக்கு விஷ்ணு என்ற மகனும், வித்ய நிகாஷினி என்ற மகளும் உள்ளனர்.
இந்நிலையில் மாணிக்கம் கடந்த இரண்டு மாதமாக செல்போனில் அடிக்கடி வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்தது மனைவிக்கு தெரியவந்து உள்ளது. இதுகுறித்து மனைவி பிருந்தா மாணிக்கத்திடம் கேட்கும் போது பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்து உள்ளது.
சம்பவத்தன்று பிருந்தா தனது கணவரிடம் இதுகுறித்து கேட்டபோது சண்டை ஏற்பட்டு உள்ளது. இதனால் பிருந்தா தனது குழந்தைகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்று உள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணிக்கம் பிருந்தாவின் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார்.
இதுகுறித்து அறிந்த நம்பியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உயிரிழந்த மாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.