அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்த கலெக்டர்...!

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் இன்று அலுவலகத்திற்கு சைக்கிளில் வந்து உள்ளார்.

Update: 2022-03-09 12:00 GMT
மதுரை,

மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி வாரத்தில் ஒரு நாள்  புதன்கிழமை மட்டும் அரசு ஊழியர்கள் வாகனங்களை கைவிட்டு சைக்கிள் மூலம் பணிக்குவர அறிவுறுத்தியிருந்தார். 

இதனை செயல்படுத்தும் விதமாக மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது சைக்களில் புறப்பட்டு சென்றார்.

அப்போது சாலையில் சைக்களில் சென்ற கலெக்டரை பொது மக்கள் வியப்புடன் கண்டனர். 


மேலும் செய்திகள்