பணிசெய்ய விடாமல் தடுத்தவரை கைது செய்யக்கோரி தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பணிசெய்ய விடாமல் தடுத்தவரை கைது செய்யக்கோரி தாலுகா அலுவலக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.;

Update: 2022-03-08 19:07 GMT
அணைக்கட்டு

அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி அளவில் காட்பாடி தாலுகா வஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் வந்துள்ளனர். அவர்கள் அரசு ஆவணங்களை வீடியோ எடுத்ததாகவும், இதை தட்டிக்கேட்ட தலைமையிடத்து துணை தாசில்தாரை வீடியோ எடுத்து, அவரை பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார்கள்.

 அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். மேலும் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி நேற்று மாலை 5.45 மணிக்கு அணைக்கட்டு தாலுகா அலுவலகம் முன், தாலுகா அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்