திண்டுக்கல்: மகளிர் தின கொண்டாட்டம்..! காக்கி சீருடைக்கு டாட்டா..!
சர்வதேச மகளிர் தினத்தைப் பெண் போலீசார் வண்ண உடையில் கேக் வெட்டி கொண்டாடினர்.
திண்டுக்கல்,
பெண்களின் மகத்தான சாதனைகளைப் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மார்ச் 8 ஆம் தேதி பெண்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று பெண்கள் தினத்தை முன்னிட்டு அரசு சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் பல இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இதனைக் கொண்டாடும் வகையில், திண்டுக்கல் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் பெண் போலீசார் காக்கி சீருடைக்கு டாட்டா காட்டி, வண்ணக் கலரில் அனைவரும் சேலைகள் அணிந்து கேக் வெட்டி ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டு மகளிர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடினர்.