பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபர் கைது

உருளையன் பேட்டையில் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-03-06 18:46 GMT
புதுவை உருளையன்பேட்டையை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் குளித்து கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் குளிப்பதை குளியலறையில் உள்ள ஓட்டை வழியாக செல்போன் மூலமாக பக்கத்து வீட்டை சேர்ந்த தினகரன் (வயது 24) என்பவர் படம் பிடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை தேடி வந்தனர். தற்போது அவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்