தமிழகத்தில் 23-வது கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது
தமிழகம் முழுவதும் இன்று 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வாரத்தில் ஒருநாள் மெகா தடுப்பூசி முகாமை நடத்தி வருகிறது.அந்தவகையில், தமிழகம் முழுவதும் இன்று 50 ஆயிரம் இடங்களில் 23 ஆவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1600- இடங்களில் முகாம் நடைபெறுகிறது.
சென்னை கே.கே. நகர் பகுதியில் தடுப்பூசி முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் ஆர்.பிரியா ஆகியோர் கலந்துகொண்டு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தனர்.
இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த தடுப்பூசி முகாமை பயன்படுத்த வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.