போட்டியின்றி ஒருமனதாக தேர்வு சென்னை மாநகராட்சியின் 49-வது மேயராக பிரியா பதவியேற்பு
சென்னை மாநகராட்சியின் 49-வது மேயராக பிரியா பதவியேற்றார். அவருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு செங்கோல் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை,
336 ஆண்டு நீண்ட நெடிய பாரம்பரியம், வரலாற்று சிறப்பு அம்சங்களை பெருநகர சென்னை மாநகராட்சி சுமந்துள்ளது. தமிழ்நாட்டிலேயே 200 வார்டுகளுடன் மிகப்பெரிய மாநகராட்சி என்ற பெருமையுடன் திகழ்கிறது. இத்தகைய பெருமைமிக்கு சென்னை மாநகராட்சிக்கு கடந்த மாதம் நடைபெற்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அபார வெற்றி பெற்றது. 167 இடங்களில் களம் இறங்கிய தி.மு.க. 153 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றியது.
மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மேயர்- துணை மேயரை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தி.மு.க. மேயர் வேட்பாளராக திரு.வி.க. நகர் மண்டலத்தில் அடங்கி உள்ள 74-வது வார்டில் வெற்றி வாகை சூடிய ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டார்.
மேயராக தேர்வு- பதவியேற்பு
சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்டரங்கில் நேற்று காலை 9.30 மணிக்கு மறைமுக தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கின. ஓட்டுப்பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேயர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியிடம் ஆர்.பிரியா நேற்று காலை 9.35 மணியளவில் தாக்கல் செய்தார். அவரது மனுவை தமிழ்செல்வி (வார்டு-76), சரிதா மகேஷ் (69) ஆகிய 2 கவுன்சிலர்கள் வழிமொழித்தனர்.
மேயர் பதவிக்கு வேறு யாரேனும் போட்டியிட விரும்பினால் வேட்பு மனுவைத்தாக்கல் செய்வதற்காக காலை 9.45 மணி வரை, அதாவது 15 நிமிடங்கள் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் பிரியாவுக்கு போட்டியாக வேறு யாரும் வேட்புமனு அளிக்க முன்வரவில்லை. இதையடுத்து மறைமுக தேர்தல் நடைமுறையின்றி சென்னை மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அமைச்சர்கள் பங்கேற்பு
மேயரான பிரியாவுக்கு தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்பட கவுன்சிலர்கள் கைத்தட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஆர்.பிரியாவுக்கு மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மேயராக பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது பிரியா மேயருக்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். இதையடுத்து கமிஷனர் ககன்தீப் சிங் பேடி மேயருடைய சிவப்பு நிற அங்கியையும், மேயர் அணியும் 105 பவுன் தங்கசங்கிலையும் வழங்கினார்.
தொடர்ந்து புன்னகை பூத்த முகத்துடன் மேயருக்குரிய பாரம்பரிய ஆடையான சிவப்பு நிற அங்கி மற்றும் தங்கச்சங்கிலியை அணிந்து கம்பீரமாக வந்தார். பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மயிலை த.வேலு, தாயகம் கவி ஆகியோர் கலந்துகொண்டனர். மேயர் பிரியாவுக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் அவருக்கு வெள்ளி செங்கோல் வழங்கி மேயர் நாற்காலியில் அமர வைத்தனர். மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பூங்கொத்து வழங்கி தனது வாழ்த்தை தெரிவித்தார்.
ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியின் 49-வது மேயர் ஆவார். ஏற்கனவே தாரா செரியன், காமாட்சி ஜெயராமன் ஆகிய 2 பெண்கள் மேயர் பதவியில் இருந்துள்ளார். தற்போது பிரியா, சென்னை மேயர் பதவியை அலங்கரிக்கும் 3-வது பெண் மேயர் ஆவார்.
துணை மேயர் மகேஷ்குமார்
சென்னை மாநகராட்சி துணை மேயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று மதியம் 2.30 மணியளவில் நடைபெறும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தேர்தல் நடைமுறைகள் தொடங்கின. தி.மு.க. சார்பில் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எம்.மகேஷ்குமார் தனது வேட்புமனுவை மாநகராட்சி கமிஷனர் ககன் தீப் சிங் பேடியிடம் 2.35 மணியளவில் அளித்தார்.
அவரது மனுவை துரைராஜ் (வார்டு-172), மதன்மோகன் (114) ஆகிய 2 கவுன்சிலர்கள் வழிமொழித்திருந்தனர். மேயரை தேர்தலை போன்றே துணை மேயர் தேர்தலிலும் போட்டி ஏற்படவில்லை. எனவே சென்னை மாநகராட்சியின் துணை மேயராக எம்.மகேஷ்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் எம்.மகேஷ்குமார் துணை மேயராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் வாழ்த்துக்கூறினர்.