ரிப்பன் மாளிகையில் கோலாகலம்: சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்கள் பதவி ஏற்பு
சென்னை ரிப்பன் மாளிகையில் கோலாகலமாக நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் 200 கவுன்சிலர்களுக்கு கமிஷனர் ககன்தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.;
சென்னை,
தமிழகத்தின் பெரிய மற்றும் பழமையான மாநகராட்சியாக பெருநகர சென்னை மாநகராட்சி திகழ்கிறது. பல்வேறு பாரம்பரியமிக்க இந்த மாநகராட்சி 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான கவுன்சிலர்கள் கூட்டம் நடத்தும் இடமான ரிப்பன் மாளிகையின் 2-வது தளத்தில் உள்ள மன்ற கூட்டரங்கம் செயல்பட்டு வந்தது.இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடைபெறாததால் இந்த மன்ற கூட்டரங்கம் பூட்டப்பட்டு ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது நடந்த சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்க மன்ற கூட்டரங்கம் சிவப்பு வண்ண இருக்கைகளுடன் புதுப்பொலிவு பெற்றது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மன்ற கூட்டரங்கில் நேற்று கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பதவி பிரமாணம்
பாரம்பரியமிக்க சென்னை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழாவுக்கு, தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் தங்களது ஆதரவாளர்களுடன் ரிப்பன் மாளிகைக்கு வந்தனர். அப்போது மத்தளங்கள் முழங்க வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்க சென்றனர். சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள 2-வது தளத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு தனி இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மன்ற கூட்டரங்கில் சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்களது வார்டு வாரியாக இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கையெழுத்து
காலை 10 மணிக்கு தமிழத்தாய் வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், மன்ற செயலாளர் ராஜசேகர் வார்டு வாரியாக வெற்றி பெற்ற கவுன்சிலர்களின் பெயர்களை வாசித்தார். இதையடுத்து கவுன்சிலர்கள் ஒவ்வொருவராக உற்சாகமாக பதவி பிரமாணம் எடுக்க மேடைக்கு வந்தனர். அப்போது கமிஷனர் ககன்தீப் சிங் பேடி ‘நான்’ என உறுதிமொழியை தொடங்க, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் கவுன்சிலர்களாக உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவுன்சிலராக பதவி ஏற்றவர்கள் மிக சந்தோஷத்துடன் அங்குள்ள பதிவேட்டில் தங்களது முதல் கையெழுத்தை பதிவு செய்தனர். பதவி பிரமாணம் முடித்த பின்னர் கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, அனைத்து கவுன்சிலர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நாட்டுபண்ணுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
102 பெண்கள்
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில் 102 பெண்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் 4 பெண்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்கள். சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டரங்கில் முதல் முறையாக பாதிக்கும் மேற்பட்ட இருக்கைகளில் பெண்கள் அமர்ந்தது பெரும் அளவில் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் எம்.பி., பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள் விஷூ மஹாஜன், டி.சினேகா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
பதவி ஏற்க பஸ்சில் வந்த காங்கிரஸ் பெண் கவுன்சிலர்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 126-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடியவர் அமிர்தா வர்ஷினி. பதவி ஏற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கவுன்சிலர்கள் தங்கள் வசதிகளுக்கு ஏற்ப வித, விதமான வாகனங்களில் வந்து இறங்கினார்கள். ஆனால் கவுன்சிலர் அமிர்தா வர்ஷினியோ மிகவும் எளிமையாக அரசு பஸ்சில் பயணம் செய்து அவர் ரிப்பன் மாளிகைக்கு வந்தார்.
அமிர்தா வர்ஷினி பதவி ஏற்கும்போது அரசு பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்வதற்கான உத்தரவு போட்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்தார். மேலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்றடைய உறுதி ஏற்பேன் என்றும் அவர் கூறினார்.
பதவி ஏற்கும்போது எம்.ஜி.ஆர். பாடல் பாடிய அ.தி.மு.க. கவுன்சிலர்
பெருநகர சென்னை மாநகராட்சியின் 193-வது வார்டை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலரான கோவிந்தசாமி, பதவி ஏற்றபோது முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரை புகழ்ந்து பேசினார். இதையடுத்து கவுன்சிலர் பதவிக்கான உறுதிமொழியை எடுத்துகொண்டார். தொடர்ந்து எம்.ஜி.ஆர். நடித்த தெய்வத்தாய் படத்தில் இடம்பெற்ற முன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் என்ற பிரபல பாடலில் உள்ள ‘பதவி வரும்போது பணிவு வர வேண்டும், துணிவும் வரவேண்டும் தோழா’ என்ற வரிகளை பாடினார். அப்போது அங்கிருந்த தி.மு.க.வினர் இது கட்சி கூட்டமல்ல என கோஷம் எழுப்பினர். இதனால் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.
வெற்றிக்கு ‘தில்லை அம்பலத்தான்’தான் காரணம் என வணங்கிய பா.ஜ.க. கவுன்சிலர்
பெருநகர சென்னை மாநகராட்சி தேர்தலில் 134-வது வார்டில், பா.ஜ.க. வேட்பாளர் உமா ஆனந்தன் வெற்றி பெற்றார். 66 வயதான உமா ஆனந்தன், சென்னை மாநகராட்சியின் ஒரேஒரு பா.ஜ.க. கவுன்சிலர் ஆவார்.
இந்த நிலையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுத்தபின், ‘நான் வெற்றி பெற்றதற்கு ‘தில்லை அம்பலத்தான்’ தான் காரணம் என கடவுள் பெயரை வாழ்த்தி சொல்லி வணங்கிவிட்டு சென்றார்.
9 மாத கர்ப்பிணி கவுன்சிலராக பதவி ஏற்பு
சென்னை மாநகராட்சியின் 167-வது வார்டில் துர்காதேவி தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
9 மாத கர்ப்பிணியான அவர் நேற்று பதவி பிரமாணம் எடுக்க ரிப்பன் மாளிகை வந்தார். தொடர்ந்து அவரது பெயர் அழைக்கப்பட்டபோது நிதானமாக நடந்து வந்த துர்காதேவி, கவுன்சிலராக உறுதிமொழி படித்து பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
மேயர், துணை மேயர் பதவிக்கு நாளை தேர்தல்
தமிழகத்தில் 200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் புதிய கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்ற நிலையில், மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. சென்னை மேயர் பதவியை இதுவரை தாரா செரியன் மற்றும் காமாட்சி ஜெயராமன் ஆகிய 2 பெண்கள் அலங்கரித்துள்ளனர். தற்போது சென்னை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்ணுக்கு (எஸ்.சி) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. பெரும்பான்மையாக இருப்பதால் அக்கட்சி சார்பில் நிறுத்தப்படும் பெண் மேயர் வேட்பாளர் யார்? என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.
அதில், ஷீபா (122-வது வார்டு), ஆர்.பிரியா (74-வது வார்டு), கீதா (171-வது வார்டு), சமீனா (188-வது வார்டு) உள்ளிட்டோரின் பெயர்கள் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது. இன்று (வியாழக்கிழமை) தி.மு.க. சார்பில் மேயர் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.