தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறது - ராகுல்காந்தி பேச்சு
தமிழகத்தில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய சக்தியாக இருக்கிறது என்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி பேசினார்.;
சென்னை,
தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கலந்துகொண்டார்.
கூட்டத்தில் ராகுல்காந்தி பேசியதாவது:-
முக்கிய மாநிலம் தமிழகம்
காங்கிரஸ் கட்சிக்கு முக்கியமான மாநிலம் தமிழகம். என்னுடைய நாடாளுமன்ற உரையில் கேட்டீர்கள் என்றால், இந்தியா என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு என்று கூறியிருந்தேன். இந்த கூட்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் முக்கியத்துவம் இருக்கிறது. இந்த வழியில் பார்க்கும்போது, காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பலம் தமிழகத்தில் இருக்கிறது.
வலிமையான காங்கிரஸ் கட்சியை தேசத்தில் உருவாக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் அதனை வலிமையானதாக மாற்ற வேண்டும். தமிழகத்தில் வலிமையான காங்கிரஸ் கட்சியாக உருவெடுக்க செய்ய வேண்டும் என்றால், எந்த ஒரு சமரசமும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளில் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்.
மிகப்பெரிய சக்தி
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பு இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க.வுடன் இணைந்து மிகப்பெரிய சக்தியாக நாம் இருக்கிறோம். தி.மு.க.வோடு இணைந்து பங்குதாரர்களாக இருக்கிறோம். இந்த கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டியது கட்டாயமாகும். கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்றால், நாம் நம்மை வலிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். கட்சி அமைப்பின் அடிப்படை கட்டமைப்புகளை வலுப்படுத்தவேண்டியது அவசியம். காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் வலிமையான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தவேண்டும். இதை நாம் மெதுவாக, வலிமையானதாக மாற்றுவோம்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடித்தளம் அமைக்கவேண்டிய பெரும் பொறுப்பு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு இருக்கிறது. அவர்கள் தமிழக பெண்களின் உரிமைகளை பாதுகாப்பவர்கள். தமிழகத்தில் பேசுவது பெருமையாக இருக்கிறது. 50 தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ஒரு அறையில் இருந்தால், 500 காங்கிரஸ் நிர்வாகிகள் இருப்பது போன்று அவர்களுடைய ஒலி இருக்கும். உங்களோடு இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். அழகான இந்த தமிழகத்தில், அற்புதமான காங்கிரஸ் கட்சியை கட்டமைக்க உதவுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
குழந்தையுடன் ‘செல்பி’
கூட்டத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த ஒன்றிய காங்கிரஸ் கவுன்சிலர் சாந்தினியின் 6 வயது குழந்தை பிரீப்ளின், ராகுல்காந்தியை பார்த்து கையசைத்தார். உடனடியாக ராகுல்காந்தி அந்த குழந்தையை மேடைக்கு அழைத்து தனது இருக்கை அருகே அமர வைத்தார். பின்னர் அந்த குழந்தையுடன் ஜாலியாக பேசி, செல்பியும் எடுத்துக்கொண்டார். குழந்தைக்கு சாக்லெட்டும் வழங்கினார். ராகுல்காந்திக்கு திருக்குறளை கே.எஸ்.அழகிரி வழங்கினார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி படுகொலையின்போது பலியானவர்களின் வாரிசுகள் ராகுல்காந்தியை சந்தித்து, அவருக்கு ராஜீவ்காந்தி உருவ படத்தை நினைவுப்பரிசாக வழங்கினர்.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், டாக்டர் சிரிவல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், டாக்டர் செல்லக்குமார், விஜய் வசந்த் உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.