மதுரவாயலில்: மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சோகம்!

மதுரவாயல் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் மகள் கண் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2022-02-28 08:50 GMT
போரூர்:

சென்னை பாடி பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் பெல்லார்மின் (வயது 45) சிவில் இன்ஜினியர்.  இவரது மகள் சகாய ஏஞ்சலின் ஷாலினி கல்லூரி மாணவி. 

இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் தனது மகள் ஷாலினியை பழைய மகாபலிபுரம்  சாலை காலவாக்கத்தில் உள்ள  கல்லூரியில் கொண்டு விடுவதற்காக ராபர்ட் தனது காரில் சென்று உள்ளார். 

இவர்கள் சென்று கார் மதுரவாயல் அருவே வந்த போது கட்டுபாட்டை இழந்து இரும்பு கம்பிகளை ஏற்றி சென்ற லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் லாரியில் இருந்த இரும்பு கம்பி ராபர்ட்டின் கழுத்தில் குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விபத்தில் மகள் ஷாலினி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ள நிலையில்,  மகள் கன் முன்னே தந்தை உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தகவல் அறிந்து வந்த  கோயம்பேடு போக்குவரத்து போலீசார் ராபர்ட் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி டிரைவரை கைது செய்து விசாரண நடத்தினர்.

விசாரணையில்,  லாரியின் பின் பக்கம் சிகப்பு கொடி மற்றும் எச்சரிக்கை "ரிப்ளக்டர்" ஏதும் பயன்படுத்தாமல் இருந்ததே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. 

மேலும் செய்திகள்