கல் குவாரி அமைக்க எதிர்ப்பு; மலை மீது ஏறி போராட்டம் நடத்திய பொதுமக்கள்...!
கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள் மலை மீது ஏறி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.;
சிவகிரி,
தென் காசி மாவட்டம் சிவகிரி அரியூர் கிராமத்தில் பிரேம்குமார் என்பவர் கல் குவாரி அமைப்பதற்கு குத்தகை உரிமம் பெற்றதாக கூறப்படுகின்றது. பிரேம்குமார் கல் குவாரி அமைய உள்ள இடத்தில் இன்று பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.
இதற்கு அரியூர், இருமன்குளம், வடக்கு புதூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரேம்குமார் முறையான உரிமை இல்லாமல் குவாரி அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றார் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். மேலும் கல் குவாரி அமைய உள்ள அரியூர் மலை மீது ஏறி போராட்டமும் நடத்தினர்.
இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிவகிரி தாசில்தார் செல்வக்குமார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்ததை நடத்தினார. இந்த சம்வபம் தொடர்பாக ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இது தொடர்பாக தாசில்தார் கூறுகையில்,
பொதுமக்களின் போராட்டத்தால் எந்த சட்ட ஒழுங்கி பிரச்சனையும் ஏற்ப்படவில்லை. மேலும் இப்பகுதியில் உரிமம் இல்லாமல் குவாரிகள் நடத்தி வருவது தெரியவந்தால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.