3-வது வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் கைது
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீன்பிடி வலை தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவரது மகள், மருமகன் மீதும் வழக்கு பாய்ந்தது.
சென்னை,
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதில் ஒரு வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஜெயக்குமார் மீது 3-வது வழக்கு பாய்ந்துள்ளது.
சென்னை துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தொழில் அதிபர் மகேஷ். இவர் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான் சென்னை துரைப்பாக்கம் பகுதியில் மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வந்தேன். சுமார் 8 கிரவுண்டு நில பரப்பளவில் அந்த தொழிற்சாலை உள்ளது. அந்த 8 கிரவுண்டு நிலமும், எனக்கு சொந்தமானது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகன் நவீன்குமார் எனது தொழிற்சாலையில் பங்குதாரராக இருந்தார். 2016-ம் ஆண்டு என்னை மிரட்டி எனது தொழிற்சாலையை நவீன்குமார், அபகரித்து கொண்டார்.
அந்த தொழிற்சாலையை மூடிவிட்டு, நவீன்குமார் அவரது மனைவி ஜெயபிரியா (ஜெயக்குமாரின் மகள்) பெயரில் கும்மிடிப்பூண்டியில் புதிதாக ஒரு மீன்பிடி வலை தயாரிக்கும் தொழிற்சாலையை தொடங்கி விட்டார். எனது கம்பெனியில் வேலை பார்த்த தொழிலாளிகளை மிரட்டி நவீன்குமார் அவரது தொழிற்சாலைக்கு அழைத்து சென்றுவிட்டார்.
ஜெயக்குமார் பின்னணி
தற்போது நான் 8 கிரவுண்டு நிலம் மற்றும் தொழிற்சாலையை இழந்துவிட்டேன். நவீன்குமாரின் இந்த சட்டவிரோத செயலுக்கு, அப்போது அமைச்சராக இருந்த ஜெயக்குமார் பின்னணியில் இருந்தார். இந்த சதித்திட்டத்தில் ஜெயக்குமாருக்கும், பங்கு உண்டு. எனது நிலம் மற்றும் தொழிற்சாலையை மீட்டுத்தருவதோடு, இதில் சட்டவிரோதமாக செயல்பட்ட ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார் மற்றும் மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
வழக்கு-கைது
இந்த புகார் மனு மீது ஜெயக்குமார், அவரது மருமகன் நவீன்குமார், மகள் ஜெயபிரியா ஆகியோர் மீது கொலை மிரட்டல், சதித்திட்டம் உள்ளிட்ட 6 சட்டப்பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் ஜெயக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். கைதான தகவல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ஜெயக்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் இன்று (சனிக்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஜெயக்குமாரின் மகள், மருமகன் மீதும் கைது நடவடிக்கை பாயும் என்று தெரிகிறது. ஐகோர்ட்டு உத்தரவு அடிப்படையில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.