ஆரோவில் குதிரையேற்ற போட்டி
புதுவையில் ஆரோவில் குதுரையேற்ற போட்டி 1 ந் தேதி தொடங்குகிறது.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் ஆண்டுதோறும் குதிரையேற்ற போட்டி நடத்தப்பட்டு வருகின்றன. 22-வது ஆண்டு குதிரையேற்ற போட்டி வருகிற மார்ச் 1-ந்தேதி தொடங்கி 6-ந்தேதி வரை நடக்கிறது.
இந்த போட்டிகளில் சென்னை, பெங்களூரு, கோவை, நீலகிரி, மைசூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொள்கின்றனர். போட்டிகள் காலை 6.30 மணிமுதல் 10 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6 மணி வரையிலும் நடக்கின்றன.