மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள். ஓ.பன்னீர்செல்வம்- எடப்பாடி பழனிசாமி மரியாதை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.;

Update: 2022-02-24 07:50 GMT
சென்னை,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்தநாள் விழா இன்று அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. தொண்டர்கள், ஜெயலலிதாவின் சிலைகள் மற்றும் படங்களுக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்கள். இதே போல் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

காலை 10 மணியளவில் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்தனர். மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்தனர். அதனைதொடர்ந்து எம்.ஜி.ஆர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியை தழுவியபோதும் கூட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வினர் தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். அங்கு கூடியிருந்த தொண்டர்களுக்கு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு இனிப்புகளை வழங்கினார்கள்.

மேலும் செய்திகள்