தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-02-20 17:57 GMT
புதுக்கோட்டை
குரங்குகள் தொல்லை
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகிறது. இந்தநிலையில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருகிறது. மேலும் அக்குரங்குகள் அலுவலகத்தின் உள்ளே புகுந்துள்ளதால் ஊழியர்கள் அச்சத்துடன் பணியாற்றி வருகின்றனர். மேலும் ஊழியர்களின் உணவுகளையும் தூக்கி சென்று விடுகிறது. மேலும் அதனை துரத்தும்போது ஊழியர்களை கடிக்க பாய்கிறது. எனவே கலெக்டர் அலுவலகத்தில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோபி, பெரம்பலூர்.


பழுதடைந்த பயணிகள் நிழற்குடை
புதுக்கோட்டை மாவட்டம்,ஆதனக்கோட்டை அருகே வளவம்பட்டி கிராமத்தில் ஆதிதிராவிடர் பகுதி சாலையில்  20 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த வழியாகத்தான் புதுக்கோட்டையில் இருந்து சில நகரப் பஸ்கள் கந்தர்வகோட்டைக்கு இயக்கப்பட்டு வருகின்றன. வளவம்பட்டி கிராமத்திலுள்ள பொதுமக்கள் பஸ் ஏறி செல்வதற்கு இந்த நிழற்குடையை தான் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிழற்குடை சுவர்களில் பெரிய அளவில் விரிசல்கள் காணப்படுவதால் எப்போது விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் உள்ளனர். எனவே பழுதடைந்த பயணிகள் நிழற்குடையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், ஆதனக்கோட்டை, புதுக்கோட்டை.

சாலையில் விடப்படும் கழிவுநீர்
திருச்சி மாவட்டம், திருப்பஞ்சிலி அரசமரம் பஸ் நிறுத்தத்தில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் உணவகம், தங்கும்விடுதி, இறைச்சி கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சாலையிலேயே விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், திருப்பஞ்சிலி, 

மின்விளக்கு அமைக்க கோரிக்கை 
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் பெரிய ஆலம்பட்டி மையப்பகுதியில் மின்விளக்கு இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக இரவு நேரங்களில் நடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்விளக்கு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள், இனாம்குளத்தூர்.

மேலும் செய்திகள்