தமிழகத்தில் ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கு கீழ் குறைந்து 949 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.;

Update: 2022-02-20 14:28 GMT


சென்னை,


தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாகவே குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு 1,146 ஆக பதிவாகியிருந்த நிலையில் நேற்று தொற்று பாதிப்பு மேலும் குறைந்து 1,051 ஆக பதிவாகியது.  
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்று குறைந்து உள்ளது என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இதன்படி, தமிழகத்தில் 949 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இதனால், தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 44 ஆயிரத்து 929 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3,172 ஆக உள்ளது. தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதனால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 37,980 ஆக உயர்ந்து உள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பை கண்டறிய இன்று  80 ஆயிரத்து 755 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. சென்னையில் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்