கோவில் நிலத்தை அபகரித்த வி.ஏ.ஓ உட்பட 3 பேர் கைது - போலீசார் விசாரணை

புத்தூர் அருகே கோவில் நிலத்தை அபகரித்த தாயின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்த வி.ஏ.ஓ உட்பட 3 பேர் கைது

Update: 2022-02-17 04:06 GMT
நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்தவர் சண்முகம். இவர் புத்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தலைவராக உள்ளார்.

இந்த நிலையில் புத்தூர் வி.ஏ.ஓ செல்வம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.46 லட்சம் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் தயார் செய்து தனது தாயார் மலர்க்கொடியின் பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளார். பின்னர் இந்த நிலத்தை தனது சகோதரன் தினகரன் என்பவர் பெயருக்கு மாற்றி உள்ளார்.

இதனை அறிந்த சுப்பிரமணிய சுவாமி கோவில் தலைவர் சண்முகம் கோவில் நிலத்தை மீட்டுத்தரக்கோரி நாகை நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசாரிடம்  கடந்த 13-ம் தேதி புகார் அளித்தார்

புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்திய போலீசார் வி.ஏ.ஓ செல்வம் பட்டா மாறுதல் செய்தது உறுதியானதை தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

இதற்கு உடந்தையாக இருந்த தாய் மலர்க்கொடி மற்றும் சகோதரன் தினகரனும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்