தமிழகத்தில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,325 இல் இருந்து 1,310 ஆக குறைந்துள்ளது.;

Update: 2022-02-16 14:51 GMT
சென்னை

தமிழகத்தில் இன்றைய  கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் 85,579 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 1,310 ஆக உள்ளது.

சென்னையில் மேலும் 296 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சென்னையில் ஏற்கனவே 303 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 296 ஆக குறைந்தது.

கொரோனாவில் இருந்து மேலும் 5,374 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 33,75,281 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 31,368 ல் இருந்து 27,294 ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 10 பேர் இறந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,956 ஆக உயர்ந்துள்ளது.  அரசு மருத்துவமனைகளில் 5 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 5 பேரும் உயிரிழந்தனர். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்