தி.மு.க.வேட்பாளர்: ரூ.12 லட்சம் மோசடி; பாதிக்கப்பட்டவர் தீக்குளிக்க முயற்சி

தி.மு.க. வேட்பாளர் ரூ.12 லட்சம் மோசடி செய்துவிட்டதாக ஜெயமோகன் என்பவர் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்று உள்ளார்.;

Update: 2022-02-16 09:50 GMT
திருச்சி:

திருச்சி மாநகராட்சி 36-வது வார்டு உறுப்பினருக்கான தேர்தலில், தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுபவர் கார்த்திகேயன்.இவர் ஜெயமோகன்(வயது 48) என்பவருடன் கூட்டுசேர்ந்து திருச்சி மாநகராட்சியில் ஒப்பந்த பணி செய்துள்ளார்.

இப்பணியில் தி.மு.க.வேட்பாளர் கார்த்திகேயன் ரூ.12 லட்சம் மோசடி செய்துவிட்டதாக கூறி, பாதிக்கப்பட்ட ஜெயமோகன் தனது தாயார் ஜெயாவுடன், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தீக்குளிக்க முயற்சித்தார். அவர்களை தடுத்து செசன்ஸ் கோர்ட்டு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்