மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.93 அடியாக குறைவு
இன்றைய நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 368 கனஅடியாக குறைந்துள்ளது.;
சேலம்,
காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள அணைக்கு கர்நாடகாவில் உள்ள கபினி அணை மற்றும் கிருஷ்ணா ராஜா சேகர அணை ஆகியவற்றிலிருந்து நீர் பெறப்படுகிறது. இந்த அணையின் சேமிப்பு உயரம் 120 அடி மற்றும் இதன் கொள்ளளவு 93.4 டி.எம்.சி. ஆகும்.
காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு குறைந்ததால், கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்வரத்து 368 கனஅடியாக குறைந்துள்ளது. இதையடுத்து அணையின் நீர்மட்டம் 107.93 அடியாக குறைந்துள்ளது.
அதே சமயம் அணையில் தற்போது நீர் இருப்பு 75.50 டி.எம்.சி. ஆக குறைந்துள்ள நிலையில், மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைகளுக்காக 1,500 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.