நாகர்கோவிலில் இன்று ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் பிரசாரம்

நாகர்கோவிலில் இன்று நடைபெற உள்ள அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகிறார்.

Update: 2022-02-13 23:45 GMT
நாகர்கோவில், 

தமிழகம் முழுவதும் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி துணை தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு நாகர்கோவிலில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

இதற்காக அவர் இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து நாகர்கோவில் வருகிறார். பின்னர் அவர் நாகர்கோவில் நாகராஜா திடலில் நடைபெறும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிமுகம் செய்து, பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்து சிறப்புரையாற்றுகிறார்.

இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்