தேசிய சிலம்பு போட்டியில் தமிழக மாணவர்கள் சாதனை

பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் தாடிக்கொம்பை சேர்ந்த மாணவ மாணவிகள் 24 பதக்கங்களை பெற்று சாதனை.;

Update: 2022-02-10 06:50 GMT
திண்டுக்கல்,

பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த தாடிக்கொம்பு லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் அவர்கள் எட்டு தங்கப் பதக்கம், ஏழு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஒன்பது வெண்கலப் பதக்கம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் சந்திரசேகரன் முதல்வர் ரமேஷ் துணை முதல்வர் வித்யா மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்