‘நீட்' தேர்வை கொண்டு வந்தது யார்? சட்டசபையில் காரசார விவாதம்
‘நீட்' தேர்வை கொண்டு வந்தது யார்? என சட்டசபையில் காரசார விவாதம் நடந்தது.
சென்னை,
தமிழக சட்டசபையில் நேற்று கொண்டுவரப்பட்ட ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து அ.தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான சி.விஜயபாஸ்கர் பேசினார். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:-
நுழைவுத்தேர்வு
சி.விஜயபாஸ்கர்:- அ.தி. மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பன்முக முயற்சியின் மூலம் ‘நீட்' தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டை தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்தார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, கடந்த கால வரலாற்றை பேசினார். 1984-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு கொண்டுவரப்பட்டது. 2005-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது, நுழைவுத்தேர்வு வேண்டாம் என்ற சட்டத்தை கொண்டுவந்தார்.
அடிப்படை ஆதாரமற்றது
அமைச்சர் மா.சுப்பிரமணியன்:- 2005-ம் ஆண்டு நுழைவுத்தேர்வுக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்பட்டதாக சொல்கிறார். இது அடிப்படை ஆதாரமற்றது. 2006-ம் ஆண்டு தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோதுதான், அனந்தகிருஷ்ணன் குழு அறிக்கையை பெற்று, நுழைவுத்தேர்வை ரத்து செய்தார்.
சி.விஜயபாஸ்கர்:- அ.தி. மு.க. ஆட்சியில் 19-6-2005 அன்று நுழைவுத்தேர்வு வேண்டாம் என்கிற அரசாணையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டார். அதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு அந்த சட்டம் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் யார் ஆட்சி?
அமைச்சர் க.பொன்முடி:- 1984-ம் ஆண்டு நுழைவுத்தேர்வு நுழைந்ததாக உறுப்பினர் இங்கே சொல்கிறார். அப்போது, தமிழகத்தில் யார் ஆட்சி நடந்தது?.
சி.விஜயபாஸ்கர்:- ‘நீட்' தேர்வு எதிர்ப்பு விஷயத்தில் அ.தி.மு.க. எப்போதும் பின்வாங்கியது இல்லை. அதில் இருந்து ஒரு துளிகூட தடம் மாறவும் இல்லை. ஆனால், ‘நீட்' தேர்வு விஷயத்தில் அ.தி.மு.க. யாருக்கோ அடிபணிந்து விட்டதாக தவறான தகவலை பரப்பி வருகிறார்கள். ‘நீட்' எதிர்ப்பு கொள்கையில் அ.தி.மு.க. எப்போதும் உறுதியாக இருக்கும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அரசின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு அ.தி.மு.க. உறுதுணையாக இருக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவையில் கூச்சல்-குழப்பம்
யாருக்கும் அடிபணிய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நாடாளுமன்றத்தில் ‘நீட்' தொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டபோது அதை அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்த்தனர்.
‘நீட்' என்ற வார்த்தை ஏன் வந்தது?. 27-12-2010 அன்று காங்கிரஸ் ஆட்சியில்தான் ‘நீட்' தேர்வு கொண்டுவரப்பட்டது. அதை யாரும் மறுக்க முடியாது.
(இந்த நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினரகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுந்து, அதற்கு ஆதாரம் இருப்பதாக கூறினார். இதற்கும் காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பதிலுக்கு அ.தி.மு.க. உறுப்பினர்களும் எழுந்து ஆதரவாக குரல் எழுப்பினர். இதனால், அவையில் கூச்சல்-குழப்பம் ஏற்பட்டது)
ஒரு ஆண்டாக ஏன் சொல்லவில்லை?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்:- ‘நீட்' தேர்வுக்கு எதிராக ஏற்கனவே ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட தீர்மானம் திருப்பி அனுப்பப்பட்டுவிட்டது. மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்ப இங்கே கூடியிருக்கிறோம். ஒரு சிறு கரும்புள்ளியும் வந்துவிடக்கூடாது. உங்கள் (அ.தி.மு.க.) ஆட்சியில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி திருப்பி அனுப்பியதை ஒரு ஆண்டாக ஏன் நீங்கள் சொல்லவில்லை.
சி.விஜயபாஸ்கர்:- அது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆய்வு செய்து, ஜனாதிபதி திருப்பி அனுப்பியது ஏன்? என்று கேட்டோம்.
(இந்த நேரத்தில் விஜயபாஸ்கர், காங்கிரஸ் கட்சியை பற்றியும், ‘நீட்' தேர்வு குறித்தும் சில வார்த்தைகளை கூறினார். அதற்கு காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, அவை குறிப்பில் இருந்து அந்த வார்த்தையை சபாநாயகர் நீக்கினார்)
யாரும் மறைக்க முடியாது
அவை முன்னவர் துரைமுருகன்:- இதில் நீயா?, நானா? என்று பேசினால் விவகாரம் நீளும். ‘நீட்' வேண்டாம் என்பதற்கு வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற இங்கே கூடியிருக்கிறோம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி:- எங்கள் மீது வெளியே அவதூறு பிரசாரம் செய்யப்படுகிறது. ஏதோ, ‘நீட்' விவகாரத்தில் அ.தி.மு.க. கவனம் செலுத்தவில்லை என்று தவறான தகவலை பரப்புகிறார்கள். எங்கள் கட்சி உறுப்பினர், ‘நீட்' தேர்வு எப்போது வந்தது என்று கூறுகிறார். அதை யாரும் மறைக்க முடியாது.
(அப்போது, காங்கிரஸ் உறுப்பினர்கள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சபாநாயகர் இருக்கையில் அமரக்கூறினார்)
சட்ட வல்லுநர்களை அமைத்து நடவடிக்கை
சபாநாயகர் அப்பாவு:- மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்து இங்கே விவாதிக்கப்படுகிறது. ‘நீட்' தேர்வை யார் கொண்டுவந்தார்கள் என்ற விவாதம் அல்ல.
சி.விஜயபாஸ்கர்:- ‘நீட்' விவகாரத்தில் சட்ட ரீதியாக நுணுக்கத்தோடு அணுக வேண்டும். சட்ட வல்லுநர்களைக் கொண்டு கவனமாக, நுணுக்கமாக அணுக வேண்டும். திராவிட கட்சிகள் ‘நீட்' எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி:- ‘நீட்' தேர்வு ரத்து குறித்து ஆக்கப்பூர்வமாக சட்ட வல்லுநர்களை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அ.தி.மு.க. ஆதரவு அளிக்கும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.