கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி

தமிழ்நாடு வான் காய் ஷிடோ ரியு கராத்தே சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

Update: 2022-02-07 08:40 GMT
கன்னியாகுமரி

தமிழ்நாடு வான் காய் ஷிடோ ரியு கராத்தே சங்கம் சார்பில் கன்னியாகுமரியில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடைப்பெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து 5 வயது முதல் 25 வயது வரையிலான  400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். போட்டி தொடக்க விழா நிகழ்வுக்கு போட்டி அமைப்பாளர் ஹெச்.ராஜ் தலைமை வகித்தார். ஆசிய கராத்தே கூட்டமைப்பு நடுவர் சி.அழகப்பன் முன்னிலை வகித்தார். கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஏ.ராஜா போட்டியை தொடங்கி வைத்தார்.

இதில், திருநெல்வேலி மாவட்ட அணி முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றது. தூத்துக்குடி மாவட்ட அணி இரண்டாவது இடமும், கன்னியாகுமரி மாவட்ட அணி மூன்றாவது இடமும் பெற்றன.

மேலும் செய்திகள்