ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார சுற்றுப்பயணம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரது சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-02-06 23:18 GMT
சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (திங்கட்கிழமை) முதல் 15-ந்தேதி வரை தொடர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட இவர்கள் பிரசார சுற்றுப்பயணத்திட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய அட்டவணை நேற்று வெளியானது.

ஓ.பன்னீர்செல்வம்

அதன்படி ஓ.பன்னீர்செல்வம் பிரசார பயண விவரம் வருமாறு:-

இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணி- காஞ்சீபுரம் மாநகராட்சி, இரவு 7 மணி-வேலூர் மாநகராட்சி, 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி-ஓசூர் மாநகராட்சி, மதியம் 12 மணி- சேலம் மாநகராட்சி, மாலை 4 மணி- ஈரோடு மாநகராட்சி, 10-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி- கோவை மாநகராட்சி, மதியம் 12 மணி- திருப்பூர் மாநகராட்சி, மாலை 4 மணி- திண்டுக்கல் மாநகராட்சி, இரவு 7 மணி- கரூர் மாநகராட்சி. 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி-திருச்சி மாநகராட்சி, மதியம் 12 மணி-தஞ்சை மாநகராட்சி, மாலை 4 மணி-கும்பகோணம் மாநகராட்சி, 12-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி- கடலூர் மாநகராட்சி, மதியம் 3 மணி- தென்சென்னை, மாலை 5 மணி-சென்னை புறநகர், இரவு 7 மணி- தாம்பரம் மாநகராட்சி.

13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி-ஆவடி மாநகராட்சி, மதியம் 12 மணி- பெரியார் நகர் (திருவொற்றியூர்), மதியம் 1.30 மணி- ராயபுரம். 14-ந்தேதி (திங்கட்கிழமை) மதியம் 12 மணி-தூத்துக்குடி மாநகராட்சி, மதியம் 3.30 மணி-நாகர்கோவில் மாநகராட்சி, மாலை 6 மணி- நெல்லை மாநகராட்சி. 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணி- சிவகாசி மாநகராட்சி, மதியம் 1 மணி- மதுரை மாநகராட்சி.

எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமியின் பிரசார பயண விவரம் வருமாறு:-

இன்று காலை 8.30 மணி- சிவகாசி மாநகராட்சி, காலை 11 மணி-நெல்லை மாநகராட்சி, மதியம் 12 மணி-தூத்துக்குடி மாநகராட்சி. 8-ந்தேதி (நாளை) மதியம் 12 மணி- தண்டையார்பேட்டை (வைத்தியநாதன் மேம்பாலம்), மதியம் 1 மணி- எழும்பூர் (தர்ம பிரகாஷ் திருமண மண்டபம்), மதியம் 3 மணி- விருகம்பாக்கம், மாலை 5 மணி- வேளச்சேரி.

9-ந்தேதி (புதன்கிழமை) காலை 8.30 மணி- தாம்பரம் மாநகராட்சி, காலை 10.30 மணி- ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபம் (ஆவடி மாநகராட்சி), மதியம் 2.30 மணி-காஞ்சீபுரம் மாநகராட்சி, மாலை 5 மணி- வேலூர் மாநகராட்சி. 11-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி- மதுரை மாநகராட்சி, காலை 11.30 மணி- திண்டுக்கல் மாநகராட்சி, மதியம் 3 மணி- கரூர் மாநகராட்சி.

14-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி-கோவை மாநகராட்சி, காலை 11 மணி- திருப்பூர் மாநகராட்சி, மதியம் 3 மணி-ஈரோடு மாநகராட்சி. 15-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணி-கும்பகோணம் மாநகராட்சி, காலை 11 மணி-தஞ்சை மாநகராட்சி, மதியம் 2 மணி-திருச்சி மாநகராட்சி.

2 பேரின் தேர்தல் பிரசாரமும் உள் அரங்கு கூட்டம் மூலம் நடைபெறும்.

மேற்கண்ட தகவல் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்