தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதல் தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் உள்பட 2 பேர் பலி
சிதம்பரத்தில் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தி.மு.க. மாணவரணி அமைப்பாளர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த அண்ணாமலைநகர் கே.ஆர்.எம். நகரை சேர்ந்தவர் சபரி என்கிற சபரிராஜன்(வயது 27). அண்ணாமலைநகர் தி.மு.க. மாணவரணி அமைப்பாளராக இருந்து வந்தார்.
இவருடைய நண்பர் நாகை மாவட்டம் இலுப்பூர் பகுதியை சேர்ந்த வெங்கட்ராமன்(28). கீரப்பாளையத்தில், உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இவர்கள் 2 பேரும், நேற்று முன்தினம் இரவு ஒரு மோட்டார் சைக்கிளில் சிதம்பரத்திற்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை சபரிராஜன் ஓட்டினார்.
2 பேர் பலி
அண்ணாமலைநகர் மேம்பாலம் வழியாக காந்தி சிலை இறக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் தடுப்பு கட்டையில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சபரிராஜனும், வெங்கட்ராமனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.