தூத்துக்குடி மாநகராட்சி தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைப்பு

தூத்துக்குடி மாநகராட்சி 60- வது வார்டு தி.மு.க வேட்பாளர் மனு நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது;

Update:2022-02-05 13:46 IST
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 60- வது வார்டு தி.மு.க வேட்பாளராக பாலகுருசாமி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடந்தது. அப்போது பாலகுருசாமி, மாநகராட்சியில் வக்கீலாக இருப்பதாகவும், அந்த பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும், அ.தி.மு.க தரப்பில் ஆட்சேபனை தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், அவரிடம் விளக்கம் கேட்டு மனுவை நிறுத்தி வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்