பிப் 7 முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி

பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் அனைத்து நீதிமன்றங்களிலும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.;

Update: 2022-02-04 16:16 GMT
கோப்புப்படம்
சென்னை,

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக நீதிமன்றங்களில் காணொலி காட்சி மூலமாக மட்டும் வழக்குகள் விசாரிக்கப்பட்டு வந்தன. 

இந்த நிலையில், தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால், தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அளித்தது. இதையடுத்து நீதிபதிகள் நடத்திய கூட்டத்தின் முடிவில் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

அதில் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்கள் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் நேரடி விசாரணைக்கு அனுமதி அளிக்கப்படும் என தலைமை பதிவாளர் அறிவித்துள்ளார்.

மேலும், வழக்கின்போது ஒருதரப்பினர் நேரடியாகவும், மற்றொரு தரப்பினர் காணொலி வாயிலாகவும் பங்கேற்கும் சூழல் உருவானால், அதற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நேரில் ஆஜராகி வாதாடும் மனுதாரர்கள் கொரோனா தடுப்பூசி கட்டாயம் செலுத்தப்பட்டிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சங்கம், வழக்கறிஞர் அறைகள் கொரோனா கட்டுப்பாட்டுடன் செயல்படலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்