அரசு அலுவலகத்தில் பாலியல் தொல்லை தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்

அரசு அலுவலகத்தில் பாலியல் தொல்லை தற்கொலைக்கு முயன்ற பெண் ஊழியர்;

Update: 2022-02-02 13:48 GMT
புதுச்சேரி
புதுச்சேரி பூமியான்பேட்டையைச் சேர்ந்த 50 வயது பெண் அரசு குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். தன்னுடன் வேலை செய்யும் அதிகாரி உள்பட சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக பெண்கள் பாதுகாப்பு விசாரணை குழுவுக்கு புகார் தெரிவித்தார். 
இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதே அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை சாதி ரீதியாக திட்டியதாக பாலியல் புகார் தெரிவித்தவர் மீது உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் பணிக்கு திரும்பினார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றார். 
அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்