திமுக 7-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, திமுக சார்பில் 7-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டார்.

Update: 2022-02-02 12:11 GMT
சென்னை,

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரேகட்டமாக தேர்தல், பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

ஜனவரி 28 ஆம் தேதி தொடங்கும் வேட்புமனுத் தாக்கல் பிப்ரவரி 4 ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுக்களை திரும்பப் பெற பிப்ரவரி 7 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுக, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான 7-ஆம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மதுரை, சிவகாசி மாநகராட்சிகள் மற்றும் ஒட்டன்சத்திரம், விருதுநகர், ராமநாதபுரம், பரமக்குடி நகராட்சிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், திமுக உடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ளதாகவும் விரைவில் முழு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் காங்கிரஸ் கூறியுள்ளது.

மேலும் செய்திகள்